தமிழீழத்தை உருவாக்குவதற்கு தடையாக இருப்பது எது..? நீதிபதி எஸ்.சிவசுப்பிரமணியம்

tamileelamஇலங்கையில் தமிழீழ அரசு ஒன்றை அமைப்பது தொடர்பிலான பிரேரணை ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

மதுரையிலுள்ள ஓய்வு நிலை நீதிபதி எஸ்.சிவசுப்பிரமணியம் இந்த பிரேரணையை முன்வைத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த பிரேரணைக்கு அமெரிக்காவின் முன்னாள் சட்ட மா அதிபர் ரம்ஸே கிளாக் பங்களிப்புச் செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதற்கு இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின் 6வது உறுப்புரை தடையாக இருப்பதாக குறித்த பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, இலங்கை அரசியலமைப்பிலிருந்து குறித்த உறுப்புரையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறானதொரு பிரேரணை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவென அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://old.tamilwin.com

TAGS: