யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள ஆவா குழு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து தோற்றம் பெற்ற ஒன்றல்ல என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மாறாக வடக்கிலுள்ள அப்பாவிப் பொது மக்களை அச்சுறுத்தி கப்பம் பெற்று பிழைப்பு நடாத்தும் ஒரு குழுவே ஆவா குழு என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
பியகமவில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஆவா குழு தொடர்பில் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எனினும், அவர்கள் குறிப்பிடுவது போன்று ஆவா குழு எந்தவொரு அரசியல் கட்சியிலிருந்தோ, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வந்ததோ, இராணுவத்துடன் தொடர்பு கொண்ட குழுவோ கிடையாது.
வடப்பகுதியில் உள்ள அப்பாவி மக்களிடம் கப்பம் பெற்று மக்களை அச்சுறுத்தி மோட்டார் சைக்கிள் கொள்ளையில் ஈடுபடும் குழுவே ஆவா குழுவாகும். இது குறித்த சகல தகவல்களையும் பாதுகாப்புப் பிரிவு சேகரித்துள்ளது.
இதேவேளை, அடுத்துவரும் நாட்களில் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இக்குழுவை வைத்து சிலர் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://old.tamilwin.com