லண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் இம் முறை மாவீரர் தினம்: வரலாற்று சிறப்பு மிக்க இடம் ஆகும்

prabhakaran01லண்டன் ஸ்ரட் பேட்டில் ஒலிம்பிக் மைதானத்தில் (எக்ஸெல் மண்டபத்திற்கு அருகாமையில்) நவம்பர் 27 மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக நிறுவப்பட்ட இம் மைதானத்தில் மாபெரும் தூண்கள் , மாவீரர் வளைவு , கல்லறைகள் மற்றும் மாவீரர்களை நினைவு படுத்தும் தூபிகள் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை வெம்பிளி அரீனாவில் மாவீரர் தினம் நடத்தப்பட்டதும். அதிகளவான மக்கள் வந்ததன் காரணத்தால், பயந்து போன வெம்பிளி பொலிசார் மேலதிகமாக மக்களை உள்ளே எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். இதனால் குளிரில் பலர் வெளியே காத்திருக்க நேர்ந்தது. ஆனால் இம் முறை அது போன்ற எந்த ஒரு அசம்பாவிதவும் நடந்து விடாமல் பாதுகாக்க பாரிய மைதானம் ஒன்றை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) ஏற்பாடு செய்துள்ளது.

maveerar 1அதுவும் பிரித்தானியாவின் புகழ் பெற்ற ஒலிம்பிக் பார்க்கில் இது நடைபெறுவது, மாவீரச் செல்வங்களையும் ஒட்டுமொத்த தமிழர்களையும் பெருமை படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இம் மாதம் 27ம் திகதி ஒரு ஞாயிற்றுக் கிழமையில் வருவதால், பல்லாயிரம் தமிழர்கள் அங்கே ஒன்று கூடுவார்கள் என்றும். பிள்ளைகளோடு அவர்கள் அங்கே வந்து , மாவீரர்களுக்கு மலர் தூவுவார்கள் என்றும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை சிங்கள கைக்கூலிகள் சிலர் , இம் முறை மாவீரர் தினம் வேறு இடத்தில் நடப்பதாகவும் கூறி மக்களை குழப்பி வருகிறார்கள். இது போன்ற சலசலப்புக்கு மக்கள் செவி சாய்க்க தேவை இல்லை. கடந்த 1990 ம் ஆண்டு முதல் லண்டனில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(26 வருடங்களாக) மாவீரர் தினத்தை நடத்தி வருகிறார்கள்.

தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால், உருவாக்கப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவே மாவீரர் தினத்தை இதுவரை காலமும் நடத்தி வருகிறார்கள். இம் முறையும் நடத்துகிறார்கள். எனவே மக்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்று திரண்டு எமது மாவீரச் செல்வங்களுக்கு உரிய மரியாதையை செலுத்தவேண்டும். எங்கள் அரசியல் பலத்தையும் காட்டவேண்டும்.

-http://www.athirvu.com

TAGS: