ஐ .நா மாநாட்டில் ஈழத் தமிழர்களிற்கான குரலை பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் அரங்கேற்றியது

tamilஐக்கிய நாடுகள் சபையின் சிவில் அரசியல் உரிமைமற்றும் பொருளாதார, சமூக, கலாச்சார உரிமை ஆகிய இரு சாசனங்களின் 50வது வருடத்தை கொண்டாடும் முகமாக நடாத்தப்பட்ட சர்வதேச மாநாடு போர்த்துக்கலின் தலைநகரான ஸ்பெயினில் கடந்த 10ம் திகதி முதல் நேற்று 12ம் திகதி வரை நடைபெற்றுள்ளது.

சர்வதேச வழங்கறிஞர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட மாகாநாட்டிற்கு, பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் மனிதர் உரிமைகள் மையம்உ த்தியோக பூர்வமாக அழைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த இரண்டு சகாப்தங்களிற்கு மேலாக ஐக்கிய நாடுகள் சபையில் ஈழத்தமிழர்களிற்காக குரல் கொடுத்து வரும் தமிழர் மனிதர் உரிமைகள்மையத்தினரது நீண்டகால சேவையையும், அவர்களினால் ஈழத்தமிழர்கள்மீதான மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்டங்களிற்கமைய அவர்களது இணைய தளத்தில் ஆவணப்படுத்தப் ட்டுள்ள காரணிகளிற்காக, மாகாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.

இந்த அமைப்பு சார்பாக இந்த மாகாநாட்டிற்கு, இதனது பொதுச் செயலாளர்திரு ச. வி. கிருபாகரன், சர்வதேச இயங்குனர் டியேற்றி மக்கோணல் ஆகியோர் கலந்து கொண்டுள்ளதுடன், உலகின் பல பகங்களிலிருந்தும்முக்கிய சர்வதேச சட்டதரணிகள், வழக்றிஞர்கள், ஆய்வாளர்கள்,கல்விமான்கள், மனித உரிமை ஆர்வளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அங்கு உரையாற்றிய, டியேற்றி மக்கோணல், இலங்கைதீவில் ஈழத்தமிழரதுஅவல நிலைபற்றியும், ஈழத்தமிழர்களிற்கு இலங்கை தீவில் நடைபெறுபவையாவும் ஓர் இன அழிப்பு என்பதை ஆதரங்களுடன் எடுத்துரைத்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பிற்கான ஆவணங்கள் இம் மகாநாட்டில்காட்சி படுத்தப்பட்டுள்ளதுடன், சர்வதேச முக்கிய புள்ளிகளுடன் பலசந்திப்புக்களையும், பரப்புரைகளையும், பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச. வி. கிருபாகரன் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பல ஆண்டுகளாக கிருபாகரன் பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் மனிதர் உரிமைகள் மையம் ஒன்றை அமைத்து ஈழத் தமிழர்களுக்காக ஜெனீவாவில் குரல் கொடுத்து வருகின்றார்.ஈழத்தில் நடந்துள்ள இன அழிப்பை நிருபிக்க போராடி வருகின்றார்.

-http://www.tamilwin.com

TAGS: