ஆவா குழுவுடன் தொடர்புடைய இராணுவத்தினர் கைது! மூடி மறைக்க முயற்சி

aavaaஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மேலுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு விநாயகபுரம் பிரதேசத்தில் வசிக்கும் மேலும் ஒரு சந்தேக நபர் நேற்று முன்தினம் இரவு பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு, விநாயகபுரத்தை சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் இதற்கு முன்னர் சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆவா குழுவுடன் தொடர்புள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

ஆவா குழு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இராணுவத்தை சேர்ந்த சிலரும் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இராணுவத்தின் பொறியாளர்கள் பிரிவு படையை சேர்ந்த இந்திரகுமார் கபில் என்பவரும் அவரது சகோதரரான இந்திரகுமார் நிரோஷன் என்பவரும் இதில் அடங்குகின்றனர்.

குறித்த இருவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்திரகுமார் கபில் என்பவர் தொடர்பிலான உண்மையை மறைக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

ஆவா குழு என்ற பெயரில் அப்பாவிகளை கைது செய்யப்படுவதாக, அவர்களின் உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: