தமிழர்களுக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமா? பாரபட்சம் பார்க்கிறதா இலங்கை அரசு?

மட்டக்களப்பில் பிரதேச செயலாளர்களையும் கிராம சேவையாளர்களையும் இடமாற்றம் செய்வார்களே தவிர பிக்குவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கமாட்டார்கள் என பட்டிப்பளை பிரதேச மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.

பட்டிப்பளை பிரதேசத்தில் பட்டிப்பளை பிரதேச சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பிக்குவுக்கு எதிராக டயர் எரித்து பொதுமக்கள் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை அதனை தடுத்து நிறுத்திய கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் செயலாளருமான கி.துரைராஜசிங்கம், அஹிம்சை ரீதியில் நடைபெறும் இவ்வாறான போராட்டத்தில் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டால் தாம் இங்கிருந்து வெளியேறவேண்டிய நிலையேற்படும் என கூறியதுடன் தண்ணீர்கொண்டு எரிந்த டயர்களையும் அணைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

-http://www.tamilwin.com

 

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்றுள்ளன.

 

மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்தின தேரர் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குள் புகுந்து பிரதேச செயலகத்தினை தாக்கி சேதப்படுத்திய நிலையில் அன்றைய பிரதேச செயலாளர் சிவப்பிரியாவினை தாக்க முற்பட்டுள்ளார்.

 

மேலும் குறித்த விடயம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாத நிலையே இருந்துவருவதாகவும் பொதுமக்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.

அன்று இருந்த பிரதேச செயலாளர் சிவப்பிரியாவுக்கு நடந்த சம்பங்களே இன்றுள்ள பிரதேச செயலாளருக்கும் நடக்கப்போகின்றது.

இன்றுள்ள பிரதேச செயலாளர் பிக்குவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தால் நாளை இந்த பிரதேச செயலாளருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கும்.

இந்து மதகுரு ஒருவர் அல்லது பொதுமகன் ஒருவர் இவ்வாறு நடந்திருந்தால் சிறையில் அடைத்திருப்பார்கள்.

இனவாதத்தினை தூண்டும் வகையில் குறித்த மதகுரு பேசும் போதும் தமிழினத்தை கேவலமான முறையில் பேசும்போதும் நாங்கள் பொறுமையாக இருப்பதா எனவும் இங்கு பொதுமக்கள் கேள்வி எழுப்பியவாறு தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/97__C-MxONY?list=PLXDiYKtPlR7NO77zXzVB1ELHqbHaFAV2I

TAGS: