சமஷ்டி முறையிலான ஆட்சியின் கீழ் கொண்டு வரப்படும் நியாயமான தீர்வின் மூலமே இலங்கைக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதனை பாராளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் வடகிழக்கு மக்களுக்காக பாரிய வேலைத்திட்டம் எதனையும் முன்னெடுக்கவில்லை. மாறாக அங்கு காணப்படும் பாதை சீர்த்திருத்த பணிகளை மாத்திரமே முன்னெடுத்துள்ளது.
வீதி அபிவிருத்தியால் மட்டும் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியாது. மாறாக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தரக்கூடிய அபிவிருத்திகளை செயற்படுத்தப்பட வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கில் படித்த பட்டதாரி இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பில்லாமல் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவர்களின் கல்வித்தகைமைக்கேற்ப அரசாங்க வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இதேவேளை, ஜேர்மன், சுவிஸ் போன்ற நாடுகள் வடக்கு மக்களின் வீடமைப்பு திட்டத்திற்காக உதவிகள் வழங்குவது வரவேற்கத்தக்கது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com
https://youtu.be/D2x0W9GQDyM?list=PLXDiYKtPlR7NO77zXzVB1ELHqbHaFAV2I