அண்மைக்காலமாக கிளர்ந்தெழும் பிக்குகள் பின்னணியில் யார்? யார்?

001இப்போது நாட்டில் பௌத்தம் அழிக்கப்பட்டு வருகின்றது, என்ற புது விதமாக கருத்தொன்று பரவி வருகின்றது. உண்மையில் இது வலுக்கட்டாயமாக பரப்பப்படுகின்றது என்பதே உண்மை .

இந்தக் கருத்து நாடு முழுவதும் பதற்றத்தினையும் கலவரத்தையும் தூண்டுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் கூறப்படுகின்றது.

ஒரு வகையில் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் இதில் எந்த அளவிற்கு உண்மை உண்டு என்பது வெளிப்படுத்தப்படாத ஒன்றுதான். இலங்கையில் எது நடந்தாலும் அதன் பழியினை மஹிந்த தலையில் சுமத்தப்படுவது மட்டும் புளித்துப்போன விடயம்.

இருந்தபோதும் இனவாதத்தினை பரப்புவதற்கு ஆரம்பப்புள்ளி எது வென்று கூறும் போது அதற்கு மஹிந்தவின் பின்னணியில் உள்ளவர்கள் என வெளிப்படையாகவே விரல் நீட்டுகின்றனர் அரசியல் அவதானிகள்.

குறிப்பாக இப்போது கிளர்தெழுந்துள்ள பௌத்தம் காக்கும் படைகள் உருவெடுத்தது சுமார் 2 மாதங்களுக்கு இடையேயான காலப்பகுதியிலேயே ஆகும். அதற்கு முன்னர் இப்படியானதொரு சூழல் காணப்பட வில்லை.

இந்த கொந்தளிப்புகளின் ஆரம்பத்தில் மஹிந்தவின் சகோதரர்கள், உட்பட பொது எதிரணியினைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பிக்குகளுடன் சேர்ந்து இனவாதப் பரப்பு செயலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல் முகப்புத்தகம் ஊடாக மஹிந்தவின் முக்கிய விசுவாசியான மதுஷா ரணசிங்க என்பவர் புதுத் திட்டம் ஒன்றினை கொண்டு வந்தார். ஆரம்ப காலத்தில் நடிகையாக பின்னர் அரசியல் பாதையில் பயணிக்க முன்வந்தவர் என்பது வெளிப்படை.

லக் மவட ஹடக் என்ற பெயரில் பௌத்தத்தை காக்க வேண்டும் என்ற பாதையில் பயணிக்கத் தொடங்கினார். நாடு முழுவதும் இவர் விகாரைகளுக்கு பயணம் செய்து பௌத்தம் அழிக்கப்படுகின்றது அதனைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து வரத் தொடங்கினார்.

அதேபோன்று அன்றாடம் இவர் இலங்கையில் பௌத்தம் அழிக்கப்பட்டு விட்டது, தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மூலமாக பௌத்தம் அபாய கட்டத்தில் இருக்கின்றது, அனைவரும் ஒன்று திரண்டு பௌத்தத்தை காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றார்.

உண்மையில் இலங்கையில் இவர்கள் கொந்தளிக்கும் அளவிற்கு பௌத்தம் அழிக்கப்பட இல்லை என்பதே உண்மை. ஆனாலும் மக்களிடையே வேரு வகையிலாக கருத்து பரப்பப்பட்டு வருகின்றது.

இவ்வாறாக பிக்குகள் மூலமாக நாட்டில் கடும் போக்கான இனவாதங்கள் பரப்பப்படுவதில் முக்கியமாக கூட்டு எதிர்க்கட்சி, மஹிந்தவின் சசோதரர்கள் அதேபோன்று முக்கியமாக ஒரு நாடும் இணைந்தே செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தனது சகோதரர்கள் மூலமாக இனவாதமான செயற்பாடுகள் பரப்பப்பட்டு வருகின்ற காரணத்தினால் மக்கள் மத்தியில் மீண்டும் செல்வாக்கு பெற்று கொண்டு வரும் மஹிந்தவிற்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தாண்டி தனது அரசியல் பயணத்தில் மீண்டும் முன்னேறி வரும் மஹிந்த தன்னை சுற்றியுள்ளவர்களால் செய்யப்படும் இவ்வாறானதொரு செயற்பாட்டினால் அடுத்தது புரியாத மன நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: