வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் இலங்கையை சேர்ந்த பெண்கள்! தீவிர விசாரணையில் பல மர்மங்கள் அம்பலம்

srilanka_flag_002இலங்கையை சேர்ந்த பெண்கள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு, இது தொடர்பில் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கையை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் மாலைத்தீவில் விபச்சார தொழிலில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி இருந்தன. இதனுடன் தொடர்புடைய இருவர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் மூலம் மேலதிக தகவல்களை பெற்றக் கொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு எதிர்பார்க்கின்றது.

நூற்றுக்கும் அதிகமான இலங்கை பெண்கள் மாலைத்தீவில் விபச்சார தொழிலுக்கு ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் கிடைத்த தகவல்களுக்கமைய கடந்த ஒன்றரை மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகளின் பின்னர் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்தன. அவர்களின் மாலைத்தீவுக்கு அனுப்பப்பட்ட பெண்களின் அதிகளவிலானோர் கிராமப் பகுதி பெண்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

பெண்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் வெளிநாட்டவர்களும் தொடர்புபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த சிலர் தப்பியோடியுள்ளனர். அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பெண்களை சுற்றுலா விசா மூலம் பங்களாதேஷிற்கு அழைத்து செல்லும் நபர்கள். அந்நாட்டு முக்கியஸ்தர்களுக்கு விற்பனை செய்கின்றனர். அதற்காக ஒரு பெண்ணிற்கு சம்பளமாக மாதாந்தம் 150,000 ரூபா கிடைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சந்தேக நபரிடம் இருந்து மாலைத்தீவில் விபச்சார சேவைக்காக அனுப்பப்பட்ட பெண்கள் பலரின் புகைப்படங்கள் மற்றும் மேலும் எதிர்வரும் காலங்களில் அனுப்பப்படவுள்ள பெண்கள் சிலரின் புகைப்படங்கள் மற்றும் பயண சீட்டுகள் விசாரணை அதிகாரிகளின் பொறுப்பில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான வர்த்தகம் தொடர்பில் தகவல் தெரியும் என்றால் அது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவுக்கு உடன் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: