இலங்கையில் இராணுவ புரட்சி…! இந்தியாவின் நிலைப்பாடு என்ன..?

army_securityஇலங்கையில் இராணுவ புரட்சி ஒன்று ஏற்படுவதை இந்தியா சகித்துக் கொள்ளாது என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலில் அண்மைய நாட்களில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இராணுவ புரட்சி ஒன்று ஏற்பட போவதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

கூட்டு எதிரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன வெளியிட்டிருந்த இந்த கருத்தானது பலரின் விமசனத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுடன் நல்லுறவை பேணி வருகிறார். இலங்கையில் இராணுவப் புரட்சி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அதனை முறியடிக்க இந்தியா உதவும்.

எத்தகைய இராணுவப் புரட்சி முயற்சிகளையும் முறியடிக்க இந்தியா தனது முழு ஆதரவையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றுவதை புது டெல்லி விரும்பாது என குறிப்பிட்டுள்ள அவர், இலங்கை அரசுக்கு உதவியாக இந்தியா இரண்டு கப்பல்களை அனுப்பும் என மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: