நவம்பர் 26 – பிரபாகரன் பிறந்தநாளில் மறைந்த பிடல் காஸ்ட்ரோ!

001தமிழீழ மக்களின் புரட்சித் தலைவராக விளங்கிய விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய பிறந்த தினம் நேற்று. இதே நாளில் கியூபப் புரட்சியின் நாயகன் காஸ்ட்ரோ மறைந்துள்ளார்.

தமிழீழத்திற்காக இளைஞர் படையை உருவாக்கி தமிழீழ மக்களின் பெரும் ஒத்துழைப்புடன் மாபெரும் போரை நடத்தியவர் பிரபாகரன்.

அவரது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், சிங்கள இனவாத அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டியது.

2009ம் ஆண்டு நடந்த இறுதி ஈழப் போரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் மெளனித்த பின்னர்தான் சிங்களவர்களால் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது.

அதுவரையிலும் சிங்கள இனவாதத்தை தனது விடுதலைப் புலிகள் இயக்கத்தால் கட்டுக்குள் வைத்திருந்தவர் பிரபாகரன்.

அப்படிப்பட்ட பிரபாகரனின் பிறந்த நாள் நேற்று.

இதை உலகத் தமிழர்கள் கொண்டாடி வரும் நிலையில் அதே நாளில் கியூபப் புரட்சியின் நாயகனான பிடல் காஸ்ட்ரோ மறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவு, புரட்சியை நேசிப்பவர்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தத்தில் நவம்பர் 26 வரலாற்றில் மறக்க முடியாத மிக முக்கியமான நாளாக, புரட்சி நாயகர்களின் தினமாக மாறியிருப்பது விந்தைதான்.

-http://www.tamilwin.com

TAGS: