பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய இருவரும் இணைந்து விடுதலைப் புலிகளை இரண்டாகப் பிளவுபடுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருணா வைத்தே விடுதலைப் புலிகளை அமைப்பை தோற்கடித்ததாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
அரச வாகனத்தை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பிலேயே கருணா கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், அவரின் பாவனைக்கு யார்..? வாகனத்தை கொடுத்தது என்பதை கண்டறியப்பட வேண்டும்.
சிறியளவில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கை கைது செய்யும் அரசாங்கம் பாரியளவில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளவர்களையும் கைது செய்ய வேண்டும்.
இதேவேளை, பொதுபலசேனா, ராவணா பலய, சிங்கலே உள்ளிட்ட அமைப்புகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்துகொண்டு நாட்டை புரட்டிப் போடுவதற்கு திட்டமிட்டுள்ளன.
எனினும், இதனை விளங்கிக் கொள்ளாத அரசாங்கம் எஸ்.ரி.எப் யின் முன்னாள் தலைவர் சரத் சந்திர மற்றும் கருணா போன்றவர்களை கைது செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மற்றும் கருணா ஆகிய இருவரும் இணைந்தே விடுதலைப் புலிகளை அழித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், கருணாவுடன் இணைந்து ரணில் மேற்கொண்ட சதி நடவடிக்கை தொடர்பில் அசாத் சாலி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com
https://youtu.be/Rb0M-UmKqqY?list=PLXDiYKtPlR7ORkbt_LIzes74U4Gv50X4t