ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் புதிய அரசியல் சாசனம்?

srilanka_flag_002புதிய அரசியல் சாசனம் குறித்த அறிக்கை ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியல் அமைப்பு பற்றிய விசேட அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

இந்த அமர்வுகளில் புதிய அரசியல் அமைப்பு பற்றிய விசேட அறிக்கை ஒன்றை அரசாங்கம் சமர்ப்பிக்க தயாராகி வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடிப்படை உரிமைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு மனித உரிமைப் பேரவையில் வரவேற்பு கிடைக்கும் எனவும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் நியமிக்கப்பட்ட இணை குழுக்கள் தற்போது அறிக்கைகளை சமர்ப்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலான யோசனையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொண்டு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 74ம் அமர்வு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.

இந்த அமர்வுகளுக்கு முன்னதாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி மக்களின் அனுமதியை பெற்றுக்கொண்டு, குறித்த அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

-http://www.tamilwin.com

TAGS: