இலங்கைக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்புகள் தயாரிக்க முடிந்தால், நாட்டிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுகளை நீக்கிக் கொள்ள முடியும் என பிரபல 6 நாடுகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மன் பிரான்ஸ், கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளே இதனை சுட்டிக்காட்டியுள்ளது.
பெரும்பான்மையினர் போன்று சிறுபான்மையினரின் உரிமை பாதுகாக்கப்படும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது வரையில் வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கலான அழுத்தங்கள், புதிய அரசியலமைப்புடன் ஒத்துப்போகும் என இதன் மூலம் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-http://www.tamilwin.com
போர் குற்றத்திலிருந்து விடுவிக்க இலங்கை அரசாங்கம் முயட்சிகளை மேட்கொண்டுவருகின்றது.இம் முயட்சியை முடிஅடிக்க மலேஷியா தமிழ் அமைப்புக்களின் நடவடிக்கை என்ன.? தமிழ் அரவாரியம் கவனத்தில் கொள்ளுமா .
இந்தியா/தமிழ்நாடு ஈழத்தில் நடந்ததை கண்டு கொள்ளாத போது நாம் என்ன செய்ய முடியும்? சத்தம் மட்டும் போடலாம் அவ்வளவுதான். ஐநா ஒரு காகித புலி– வீண் பேச்சுதான். எவனாவது இந்த உலகம் ஒற்றுமையோடு இருக்க பாடுபடுகின்றானா? கண்கூடாக நடக்கும் அநியாயங்களை பார்த்தும் பார்க்காதது போல் இருக்கும் உலக தலைகள் — பேசுவதற்கே எரிச்சலாக இருக்கிறது–பேசாமலும் இருக்க முடிய வில்லை– அநியாயங்களை பார்த்துக்கொண்டு இருக்கும் தலைகளை என்ன என்று சொல்வது?
1. போர்க் குற்றத்திலிருந்து தங்களை விடுவிக்க இலங்கை அரசு முயற்சி செய்யத்தான் செய்வார்கள்; அவர்கள் அப்படிச் செய்வது, எந்தத் தவறுமில்லை. ஏனென்றால் சிங்களவர்கள் தன்மானமுள்ளவர்கள். சுயமரியாதையுள்ளவர்கள்; இந்த இரண்டும் இக்கரையுலுள்ள தமிழர்களிடமில்லை; தமிழக மக்களை இலங்கை அரசு நன்குப் படித்து விட்டார்கள். அவர்கள் செய்தது வெறும் போர்க் குற்றமில்லை; அப்பட்டமான இனப் படுகொலை; மாந்தர்க் குலத்திற்கு எதிரானக் கடும் குற்றம். இந்தக் குற்றத்திற்கு இலங்கை அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். இதற்க்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்புக் கொடுக்குமா என்பதுதான் இப்போதயக் கேள்வி!. மற்ற நாடுகளை விட்டுத் தள்ளுங்கள்; ஐநாவோ மற்ற நாடுகளோ இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அவர்கள் இந்திய அரசின் கருத்தையும் முழு ஒத்துழைப்பையும் பெற வேண்டும். அன்று போர் நடந்த நேரத்தில் இந்திய அரசு இலங்கை மீது எப்படி நடந்துக் கொண்டார்களென்று நமக்கெல்லாம் தெரிந்ததுதானே.