ஒற்றையாட்சிக்கு முற்றுப்புள்ளி : மாகாணத்தை தனி அலகாக மாற்ற திட்டம்

maithrirajapakseநாட்டில் ஒற்றையாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய அரசியலமைப்புக்கான உபகுழு அறிக்கை அமைந்துள்ளது.

அதில் மாகாணங்களை தனி அலகாக மற்றும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த அறிக்கையில் மிகவும் பாதிப்பான யோசனைகளை அரசியலமைப்பில் உள்ளடக்க கூடாது.

இந்தியாவிலும் இலங்கையிலும் இல்லாத கொள்கைகளை பரிசீலித்து நாட்டை சீரழிக்க வேண்டாம் என மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

6 உபகுழு யோசனைகளின் பிரகாரம் மாகாண ஆளுநர்களுக்கான அதிகாரம் முற்றாகநீக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரங்கள் மாகாணசபை தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி மாகாண ஆளுநர் நியமனத்தை மாகாண முதலமைச்சரே செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் மாகாண ஆளுநர் முதலமைச்சருக்கு அடிபணிந்தவர்களாக மாறிவிடுவார்.

மத்திய அரசுக்கு மாகாண அரசுக்கும் இடையிலான உறவினை வலுப்படுத்திக்கொள்ளவே ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்திய ஆட்சி முறைமையில் கூட இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆனால் அது மிகவும் பாரதூரமானது. ஆளுநருக்கான அதிகாரத்தை நீக்கினால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஒற்றையாட்சியாக செயற்பட முடியாது.

அத்துடன் மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் சம அந்தஸ்து முழுமையாக நிராகரிக்கப்பட்டு மாகாணத்தை தனி அலகாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர் மாகாண நிர்வாக கூட்டமைப்புக்குள்உள்ளடக்கப்படுவார்கள்.

இவர்களுக்கு நியமங்கள் மாகாண அரச சேவை ஆணைக்குழு சுயாதீனமாக தீர்மானிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: