விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் கைது இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவருடைய கைது ஏன் பிரதானமாக பார்க்கப்படுகின்றது? இந்த கைது தொடர்பாக எழுந்துள்ள பல குழப்பகரமான சர்ச்சைகளுக்கு இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளரும் மூத்த சட்டவாளருமான எம்.எம்.நிலாம்டீன் கலந்து கொண்டு பதிலளித்துள்ளார்.
மேலும், கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகப்போவதாக சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே பொட்டு அம்மான் தலைவர் பிரபாகரனிடம் கூறியதாகவும், ஆனால் பிரபாகரன் இது குறித்து எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனவும் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com
https://youtu.be/whsaqN6dee8?list=PLXDiYKtPlR7OjaDusNA1laC7QXKbtuH3Z

























