வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்காக ஏற்பட்டுள்ள மாற்றம்

policeஓய்வு பெற்றுள்ள தமிழ் பேசும் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவரை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பொது மக்களுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான உறவினை விருத்தி செய்யும் நோக்கிலேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான எஸ்.செல்வராஜா, டி,கணேசநாதன் மற்றும் கே.அரசரத்ணம் ஆகியோரே இவ்வாறு சேவையில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஆணைக்குழு செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் மக்களிடம் இருந்து அதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளமையினாலேயே ஓய்வு பெற்ற இந்த அதிகாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையங்களில் தமிழ் மக்கள் முறைப்பாடு பதிவு செய்யும் போது புரிந்து கொள்வதில் பல சிக்கல்களை பொலிஸ் அதிகாரிகள் எதிர்நோக்குகின்றனர்.

வடக்கில் தெரிவாகியிருக்கும் 15 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகளும் தமிழ் மொழியில் உரையாடமாட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.அரசரத்ணம் கிழக்கு மாகாணத்திற்கும், டி.கணேசநாதன் வட மாகாணத்திற்கும், எஸ்.செல்வராஜா நீர்கொழும்பில் உள்ள பொலிஸ் பிரிவிற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

-http://www.tamilwin.com

TAGS: