அலெப்போவில் போர்க்குற்றங்கள்..! இலங்கையில் நேற்று..! சிரியாவில் இன்று..!

aleppoகடந்த சில நாட்களாக ரஷ்ய மற்றும் சிரிய நாடுகளுக்கிடையிலான யுத்தம் உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது.

அலெப்போ நகர மக்களுக்கெதிராக ரஷ்ய, சிரிய படைகளின் கொடூரமான போர்க்குற்றங்கள் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை ஞாபகப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிரியாவில் நடக்கும் போர்க்குற்றங்கள் 2009ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை ஞாபகப்படுத்துகின்றது. ரஷ்யாவின் சிரிய தாக்குதலில் 380 சிறுவர்கள் உட்பட 1207 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அனைத்துலக சமூகமும் மக்களை பாதுகாப்பதில் தன் கடமையில் இருந்து தவறிவிட்டது. குறிப்பாக 2009ஆம் ஆண்டுப்பகுதியில் no fire Zone என்ற பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்திருந்த தமிழ் மக்கள் மீது குண்டு மழை பொழிந்து லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

அதற்கு காரணமாக இருந்த ஒருவர் கூட தண்டிக்ககப்படவில்லை. ஐநாவும், இலங்கை அரசாங்கமும் அதனை பெரிதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

மேலும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு நீதி தேடுவதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எப்போதும் பற்றுறுதியுடன் செயற்படும். இதனை தமிழர்களுக்காக மட்டும் மேற்கொள்ளவில்லை. மாறாக யுத்தங்களால் பாதிக்கப்பட்டு வலுவிழந்து நிற்கும் அனைத்து மக்களுக்காகவுமே நாங்கள் போராடுகிறோம்.

ஐரோப்பாவில் இடம்பெறும் போர்க்குற்றங்களை தீர்த்து வைப்பதில் முன்னுதாரணமாக உலக நாடுகள் செயற்படும் என எதிர்ப்பார்த்தோம். ஆனால் அதே குற்றங்களை கையில் எடுத்துக்கொண்டு உலகமே போர்க்குற்றவாளியாகத்தான் நிற்கின்றது.

சர்வதேச ரீதியில் மக்களுக்கான சுயாதீன உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். யாருக்கும் பாரபட்சம் காட்டாது மக்களுக்கு மட்டும் சேவை செய்யக்கூடிய சிறந்த அமைப்புகள் உருவாக வேண்டும்.

இவ்வாறு உருவாகும் நிறுவனங்கள் தமது பணியை உரிய வகையில் முன்னெடுக்குமானால் அது உயிரிழந்த மக்களுக்காக அவர்கள் ஆற்றும் பிராய்ச்சித்தமாக அமையும் என அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: