இலங்கை நாட்டின் இறைமையை சவாலுக்குட்படுத்தும் விடயங்களே தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம் பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.
குறித்த துறைமுக விற்பனை தொடர்பிலான உடன்படிக்கையில் ஹம்பாந்தோட்டை பிரதேசத்திற்கான பாதுகாப்பும், பொறுப்புடமையும் சேர்த்தே சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கபட்டமையானது நாட்டின் இறைமையை சவாலுக்குட்படுத்தும் விடயமாகும் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com


























dei neeyunthan mahindravitku ஜால்ரா phota