தமிழகத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவும், அதனை தொடர்ந்து யார் கழகத்தை பெறுப்பு ஏற்ப்பது என்பது போன்ற பெரும் பதற்ற சூழல் இருந்து வந்தது. இதில் மத்திய அரசு அதிமுகவை எப்படி என்றாலும் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர கடும் முயற்சிகளை மேற்கொண்டது. மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னையில் முகாமிட்டு தங்கி, பெரும் வேலைத்திட்டங்களை செய்தார். ஆனால் மோடியின் அனைத்து செயல்களும் செயல் இழந்துவிட்டது. காரணம் என்னவென்றால், சசிகலாவுக்கு வலுத்த ஆதரவு தான்.
சசிகலாவின் கணவர் நடராஜன் அவர்கள் ஈழத் தமிழர் மீது மிகுந்த பற்றும் பாசமும் உள்ள ஒருவர். சென்னையில் எந்த ஒரு தமிழரை Q பிரிவு கைதுசெய்தாலும் தனது பவரை பாவித்து அவர்களை விடுதலைசெய்ய இரவு பகல் பாராது வேலை செய்யும் நபர் தான் நடராஜன் அவர்கள். கனடா ரொரன்டோவில் அவர் மே 18 அன்று பேசும் போது தமிழர்களுக்கு தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்று அடித்துக் கூறியுள்ளார். அவர் அதனையே நம்புகிறார். இன்று சசிகலா அவர்கள் அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில். விரைவில் அவர் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் பதவியில் அமரப் போகிறார் என்பதும் தெரிந்த விடையமே.
இன் நிலையில் ஈழத் தமிழர்களுக்கு மீண்டும் தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் பெரும் ஆதரவு பெருக உள்ளது. காரணம் என்னவென்றால் நடராஜன் அவர்கள் தான் என்கிறார்கள். இலங்கை அரசுக்கு இதனூடாக மேலும் பல புது தலைவலிகள் வரவுள்ளது என்பதனை, தற்போது எதிர்வு கூறலாம். எம்.ஜி.ஆருக்கு பின்னதாக செல்வி ஜெயலலிதா அவர்கள் புலிகள் மீது வெறுப்புக் காட்டி வந்தார். இதற்கு முழு முதல் காரணம் “சோ” என்னும் துக்ளக் ஆசிரியர் தான். தற்போது அவரும் இறந்துவிட்ட நிலையில், தற்போது தமிழக அரசியலில் ஈழத் தமிழர்களுக்கான எதிரி என்று எவரும் மிஞ்சி இல்லை. (சுப்பிரமணிய சுவாமியை தவிர) .
-http://www.athirvu.com