32 வருடங்களின் பின்னர் இன்று முதல் யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கு இடையில் பயணிகள் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள திருவாதிரை திருவிழாவில் கலந்துக் கொள்வதற்கு வடக்கு மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த சேவை முன்னெடுக்கப்படுகிறது.
இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை குறித்த திருவிழா இடம்பெறவுள்ளது.
வட மாகாணத்தின் 2000 பக்கதர்கள் அதில் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பயண கட்டணம், விசா கட்டணம் ஆகியவைகள் பக்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினால் இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு குறித்த கப்பல் சேவைக்கான அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இந்த சேவை நீண்ட காலம் செயற்படுத்தும் ஒன்று அல்ல என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் வடக்கிற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை 3 தசாப்த்தங்களின் பின்னர் இன்று ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com