கற்பிட்டி கடலில் மீனவர்களுக்கு கிடைத்த பேரதிஷ்டம்…! அதிரடி காட்டிய பொலிஸ்

hamperமீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு கிடைத்த பேரதிஷ்டம் தொடர்பான சம்பவம் ஒன்று கற்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கிலத்தின் கழிவு அல்லது அம்பர் எனப்படும் அரியவகை பொருள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 34 கிலோ கிராம் நிறையுடைய அம்பர் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதனை எடுத்து வந்த மீனவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த மீனவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த மீனவர்களினால் கொண்டுவரப்பட்ட அம்பர் எனப்படும், திமிங்கிலத்தின் கழிவு ஒரு கிலோ கிராம் ஒரு கோடிக்கும் (3 லட்சம் மலேசியா வெள்ளி ) அதிகம் என கூறப்படுகின்றது.

அம்பர் எனப்படும் இந்த திமிங்கில கழிவுப் பொருளைக்கொண்டு வாசனைத்திரவியம், மருந்துப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: