பெண் ஒருவர் இளைஞனை சூட்கேஸில் அடைத்து ஐரோப்பாவிற்கு கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த செயலில் ஈடுபட்ட மொராக்கோ பெண்ணை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஸ்பெயின் எல்லை வழியாக ஐரோப்பாவிற்கு சென்ற பெண்ணின் சூட்கேசை கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள், அதை அதிரடியாக சோதனை செய்துள்ளனர்.
அதில், 19 வயது இளைஞன் அடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், குறித்த குற்றத்தில் ஈடுபட்ட பெண்ணை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
டிசம்பர் 30ம் திகதி மட்டும் மொராக்கோவிலிருந்து சுமார் 1,100 அகதிகள் எல்லையை தாண்ட முயற்சி செய்துள்ளனர்.
இதன்போது 50 மொராக்கன் மற்றும் 5 ஸ்பெயின் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக பிராந்திய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மொரக்கோவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ஆப்பிரிக்க அகதிகளே இச்செயலில் ஈடுபடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-http://news.lankasri.com