இராணுவ முகாம் காரணமாக மன்னார் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு..! சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி

charls nimala nathanபோர் முடிந்து 7 ஆண்டுகளாகின்றன என்று கூறும் அரசும், அரச படைகளும் மன்னார் மாவட்டத்தில் மக்கள் வாழும் பகுதியில் குண்டுகளை வெடிக்க வைக்கின்றன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

தொடர்பில் அவர் தெரிவிக்கையில், இதனால் மக்கள் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். இராணுவ முகாமை அகற்றி பயிற்சிகளையும் நிறுத்த வேண்டும்.

மன்னாரில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் தற்போதும் குண்டுகள் வெடிக்க வைக்கப்படுகின்றன. குண்டு வெடிப்புகள் நடத்தப்படும் பிரதேசத்தைச் சூழ 200 குடும்பங்கள் வாழ்கின்றன.

அத்துடன், பாடசாலையும் உள்ளது. மக்களின் விவசாய நிலங்களையும், மேய்ச்சல் தரவைகளையும் கையகப்படுத்தியே இராணுவத்தினர் இராணுவ முகாம் அமைத்துப் பயிற்சிகளில் ஈடுகின்றனர்.

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தமது விவசாயக் காணிகளையும், மேய்ச்சல் தரவைகளையும் தருமாறு கேட்கும்போது தமக்கு 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது என இராணுவத்தினர் கூறுகின்றனர்.

இராணுவத்தினர் மேற்கொள்ளும் சூட்டுப் பயிற்சியில் சிக்கி கால்நடைகள் இறந்துள்ளன. கால்நடை வளர்ப்பு, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீன்பிடியும் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்விடத்தில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்திலேயே குளம் ஒன்று உள்ளது. அதில் நன்னீர் மீன்பிடி நடைபெறுகின்றது.

அந்தக் குளத்துக்குச் செல்லும் வீதியை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். குளத்துக்கு மீன்பிடிக்கச் செல்வோர் 7 கிலோமீற்றர் சுற்றியே பயணிக்க வேண்டியுள்ளது.

விவசாயம் , கால்நடை , மீன்பிடி அனைத்திற்கும் இடையூறாக இருப்பது ஓர் இராணுவ முகாமே. அதை முழுமையாக அகற்றாது விடினும் குறிப்பிட்ட சில தூரத்துக்குப்

பின்னகர்த்தி இம்மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ முன்வர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: