இலங்கை தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டில் டொனால்ட் ட்ரம்ப்

donald_9_001இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பதவியில் மாற்றம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் 45ம் ஜனாதிபதியாக கடந்த 20ம் திகதி டொனால்ட் ட்ராம்ப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின்னர், அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட அனைத்து ராஜதந்திரிகளையும் பணி நீக்கி புதிய ராஜதந்திரிகளை நியமிப்பது அமெரிக்காவில் வழமையான விடயமாகும்.

எனினும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதவர் அதுல் கேசப் பணி நீக்கப்பட மாட்டார் என தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுல் சேகப் ஒர் தொழில்சார் ராஜதந்திரி என்பதனால் அவரது பதவியில் மாற்றம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-http://www.tamilwin.com

TAGS: