விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் முல்லைத்தீவில் ஏற்பட்ட மாற்றம்…!

ltte_flagAவிடுதலைப்புலிகளின் காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டம் கல்வி நிலையில் உயர்ந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 2009 ஆம் ஆண்டின் பின்னர், குறித்த மாவட்டத்தில் கல்வி நிலை மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இடம்பெற்ற கல்விசார் அமைப்புக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தரம் 9 மற்றும் 10 இல் கல்வி பயிலும் மாணவர்கள் கூட எழுத வாசிக்க தெரியாத நிலையில் காணப்படுவதாக பாடசாலைகளின் அதிபர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்வி நிலை வீழ்ச்சி அடைவதற்கு ஆசிரியர் பற்றாக்குறை மிக முக்கிய காரணியாக இருந்து வருகின்றது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் முல்லைத்தீவு இருந்த காலப்பகுதியில் எழுத வாசிக்க தெரியாதாவர்கள் என மாணவர்கள் இருக்கவில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் புதிய பிரச்சனையாக இது இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: