உலகில் மக்கள் காணாமல் போதல், காணாமல் ஆக்கப்படுத்தல் போன்ற விடயங்கள் தற்போதும் நீடித்துக்கொண்டே செல்கின்றது எனலாம், அந்தவகையில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற போரின் போது காணாமல் போதல் என்பது இலங்கையில் சர்வசாதாரண விடயமாகவே சில தரப்பினரால் பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில், காணாமல் போதல், பலவந்தமாக காணாமல் போகச் செய்தல் ஆகிய விடயங்களில் உலக அளவில் இலங்கை 2 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
குறித்த விபரங்களை நேற்று கொழும்பில் இடம்பெற்ற செயலமர்வின்போது, பலவந்தமாக கடத்தல் மற்றும் காணாமல் போதல்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முகவரகம் தெரிவித்திருந்தது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் உறுதியான தகவல்கள் இல்லை என்றும், அத்துடன் இறுதி யுத்தத்தின்போது காணாமல்போனவர்களின் எண்ணிக்கை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியிடப்படுகின்றது. என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியிருந்தது.
அத்துடன் இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியருமான பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டு நேற்றுடன் 7 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது. இந்த நிலையில் அவர் தொடர்பான எந்த சான்றுகளும் இல்லாத நிலையில்,
காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நியாயம் வழங்கக் கோரி வவுனியாவில் உண்ணாவிரத போராட்டம் இன்றும் 3 ஆவது நாளாக தொடர்கின்றது.
மேலும் இவர்கள் ஆர்பாட்டத்தினை தொடங்கி 3 நாட்களில் பல அரசியல் வாதிகள் அங்கு சென்றிருந்தாலும் போராட்டக்காரர்களின் வேண்டுகோள்களுக்கு தீர்வு இன்னமும் கிட்டவில்லை.
-http://www.tamilwin.com