நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் இலங்கையின் புலனாய்வு பிரிவினர் தமது நடவடிக்கைகளை வடக்கில் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆங்கில செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் விடுதலைப்புலிகள் என்ற கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டவர்கள் மீது கண்காணிப்பை புலனாய்வு பிரிவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தி ஹிந்து செய்தித்தாளின் தகவல்படி சுமந்திரனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக பிரதமர் காரியாலயம் செய்தி அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்மட்ட புலனாய்வு அதிகாரிகளின் தகவல்களின்பேரிலேயே இந்த தகவல் சுமந்திரனுக்கு அனுப்பப்பட்டதாகவும் தி ஹிந்து செய்தித்தாள் குறிப்பிட்டிருந்தது.
சுமந்திரன் படுகொலை சதித்திட்டத்தின் பகீர் பின்னணி..! கொலை சதிக்கான காரணம் இதுவா..?
புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு தேசிய பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துவிடும் என்ற அச்சத்தில் சில அடிப்படை வாத சக்திகளே தன்னைக் கொலை செய்ய திட்டமிட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொலை செய்ய திட்டம்தீட்டப்பட்டிருந்த சதித்திட்டமொன்று முறியடிக்கப்பட்டதாக தெரிவித்து இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வெளியிட்டிருந்தது.
இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பொலிஸார் குறிப்பிட்ட விடயங்களே தனக்குத் தெரியும்.
கடந்த 23ஆம் திகதி பொலிஸார் தகவல் வழங்கியிருந்தனர். இந்த விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் மூலம் தனக்கு அச்சுறுத்தல் காணப்படுவதை உறுதிப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் தகவல் வழங்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும். தன்னை எதற்காக கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்பது தனக்கு தெரியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொல்லத் திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக தெரிவித்து இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வெளியிட்டிருந்தது.
அத்துடன், தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து, இந்த மாத முற்பகுதியில் சுமந்திரனுக்குத் தகவல் எச்சரிக்கை அனுப்பப்பட்டிருந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com