அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தான் விதித்துள்ள தடை இஸ்லாமியர்களுக்கானதல்ல என்றும் தன் நாட்டை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தடை விதித்ததாக விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள டிரம்ப், தன்னுடைய அதிரடி நடவடிக்கைகளால் உலக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
அவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளில் ஒன்று தான், இஸ்லாமியார்களை பெரும்பான்மையாக கொண்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் அகதிகள் மூன்று மாதங்களுக்கு அமெரிக்காவில் அனுமதிக்கபடமாட்டார்கள் என்று கூறியது. இது இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக டிரம்புக்கு எதிராக உலகின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. ஒரு புறம் இவர்கள் போராட்டம் நடத்த மறுபுறம் பெண்கள் போராட்டம் நடத்த என டிரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்நிலையில் இஸ்லாமியர்கள் தடை விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டிரம்ப் ஒரு அந்தர் பல்டி அடித்துள்ளார். அவர் கூறுகையில், இது இஸ்லாமியர்களுக்கான தடை என்றால் அது தவறு என்றும் தான் ஒரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கு தடை விதிக்கவில்லை எனவும் தீவிரவாதிகளுக்குத் தான் தடை விதித்திருக்கிறேன்.
அதுவும் தன் நாட்டின் பாதுகாப்பு நலனுக்காகவே இதை செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் கடந்த 2011 ஆண்டு ஒபாமா இராக் அகதிகள் விவகாரத்தில் 6 மாதங்கள் தடை விதித்தார். அதே முறையைத் தான் தற்போது இந்த ஏழு நாடுகளுக்கும் நான்கு மாதங்கள் என்று தெரிவித்துள்ளேன் என கூறியுள்ளார்.
உலகில் இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட 40 நாடுகள் உள்ளன. அவர்களுக்கு எல்லாம் இந்த தடை இல்லை என கூறியுள்ளார்.
மேலும் டிரம்ப் தான் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த போது தன்னுடைய பிரச்சாரத்தில் இஸ்லாமியர்களை தடை செய்வேன் என்று கூறியிருந்தார். அதற்கான முடிவையும் எடுத்தார். ஆனால் தற்போது நாட்டில் நிலவும் மோசமான சூழ்நிலையைக் கண்டு டிரம்ப் தன்னுடைய அதிகார நோக்கில் இருந்து பின் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஈரான் நாட்டில் நுழைய அமெரிக்கர்களுக்கு தடை: உச்சக்கட்டத்தை எட்டும் விவகாரம்
ஈரான் நாட்டில் நுழைவதற்கு அமெரிக்க குடிமக்களுக்கு தடை விதித்துள்ளதன் மூலம் அமெரிக்காவை பழிக்குப் பழி வாங்கியுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அந்நாட்டிற்குள் நுழைய ஈரான், ஈராக், சிரியா, சூடான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய 7 நாடுகளுக்கு அதிரடியாக தடை விதித்தார்.
சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள டிரம்பின் உத்தரவை ஐ.நா சபையும் கண்டித்துள்ளது.
இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் உத்தரவால் கடும் கோபம் கொண்ட ஈரான் நாடு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், அமெரிக்கா விதித்துள்ள தடை நீங்கும் வரை அந்நாட்டை சேர்ந்தவர்கள் ஈரான் நாட்டிற்குள் நுழையக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சகம் அறிவித்த இந்த தகவலை அந்நாட்டு அரசு ஊடகமும் உறுதி செய்துள்ளது.
7 இஸ்லாமிய நாடுகள் மீது அடக்குமுறையை பிரயோகிக்கும் டிரம்பின் உத்தரவு தீவிரவாதிகளுக்கு ஒரு மிகச்சிறந்த பரிசாக அமைந்துள்ளது என ஈரான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
இதுமட்டுமில்லாமல், அமெரிக்காவில் நுழைய 7 நாடுகளை சேர்ந்த குடிமக்களுக்கு தடை விதித்திருப்பதன் மூலம் இந்நாடுகள் ஆபத்தான நாடுகள் என்பதை உலகிற்கு டிரம்ப் உணர்த்த முயற்சிக்கிறாரா? என்ற அச்சமும் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் உத்தரவை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-http://news.lankasri.com
தமது நாட்டின் பாதுகாப்புக்கும் தனது நாட்டு மக்கள் நலனுக்காகவும் இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பது அவசியம் என்று நீங்கள் கருதினால், அதை அமல் படுத்தவது உங்கள் விருப்பம்.
அதை இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பதில் என்ன நியாயம் ?
இஸ்லாமிய நாட்டில் வாழும் மற்ற இன மக்கள் அந்நாட்டின் சட்டங்களுக்கு அது இஸ்லாமிய சட்டங்கள் ஆனாலும் மதிப்பளிக்க வேண்டும் என்று வற்புறுத்தும்போது, மற்ற நாடுகளுக்கு சென்றால் அந்நாட்டின் சட்டங்களுக்கு மதிப்பளிக்க தெரியாதவர்களை தடை செய்வதில் தப்பில்லை.
இஸ்லாமியர்கள் அமரிக்காவையும், ஐரோப்பாவையும் நாடுவது ஏனோ ?
ஒருவேளை, அமரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தவறு புரிந்தால் சிறைதண்டனை அதேயே இஸ்லாமிய நாடுகளில் அத்தவறை புரிந்தால் இஸ்லாமிய சட்டப்படி தண்டிக்க படுவோமோ என்ற பயத்தில்தான் இஸ்லாமிய நாடுகளை இஸ்லாமியர்களே வெறுக்கிறார்களோ என என்ன தோன்றுகிறது.
இவர்களுக்கு பாடம் புகட்ட உலகத்திற்கு ஒரு நல்ல தலைவர் வந்து விட்டார்.
டொனால்ட் டிரம்ப் வாழ்க பல்லாண்டு . இன்னும் பல அதிரடி நடவடிக்கைள் செய்வர் என எதிர் பார்ப்போம் . இவர்தான் உலக தலைவர் .