முல்லைத்தீவு மாவட்டத்தில் பல சிறுவர்கள் பசித்த வயிற்றுடன் தினமும் உறக்க நிலைக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு நேரம் மட்டுமே உணவை உண்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
2016ஆம் ஆண்டின் இறுதியிலும் இந்த ஆண்டு ஆரம்பப் பகுதியிலும் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாகவே பொதுமக்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
திடீரென ஏற்படும் ஒரு இயற்கை அனர்த்தத்தின் பாதிப்பு போலவே சில மாதங்களாக மெதுமெதுவாக இயற்கையின் அனர்த்தம் பொதுமக்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
இதன் காரணமாக ஏழை மக்கள் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவைத் தேடுவதே பெரும்பாடாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பல சிறுவர்களுக்கு அவர்களது வீடுகளில் நேர ஒழுங்கு இன்றி ஓரளவு ஒரு உணவு அவர்களுக்கு கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறு பல சிறுவர்கள் தினமும் பசித்த வயிற்றுடன் உறங்கி விழிப்பதாகவும் பின்னர் உணவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக குறித்த சிறுவர்களின் கல்விச் செயற்பாடுகளில் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-http://www.tamilwin.com