கொலைக்களமாக மாறும் யாழ்ப்பாணம்! மீட்டெடுக்க பிரபாகரன் வருவாரா..?

kolaikkalamயாழில் இடம்பெற்றுள்ள வாள்வெட்டு சம்பவம் அச்சத்தின் உச்ச வெளிப்பாடு என்றுதான் கூற வேண்டும். யாழ் மக்களை பதற வைத்த ஓர் சம்பவமாக இது காணப்பட்டுள்ளது.

நேற்று இரவு 07.30 மணியளவில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற மர்மக் கும்பலொன்று வர்த்தக நிலையத்திலிருந்த இளைஞர்கள் இருவரை வாள்களால் சரமாரியாக வெட்டியதுடன், கடைக்குப் பெற்றோல் குண்டு வீசியும் சென்றுள்ளனர்.

இந்த பதற்ற சூழலை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் பயன்படுத்தப்பட்டிருந்தனர்.

இது மீண்டும் ஒரு அழிவின் ஆரம்பம் என்றுதான் கூற வேண்டும். இவ்வாறான சம்பவம் தற்போது சாதாரணமாக இடம்பெறுகின்றது. இதனை ஏன் முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியை அரசு இது வரை மேற்கொள்ள வில்லை. இது புதிதாக ஆரம்பிக்கப்படவில்லை என்றாலும் பிண்ணனியில் செயற்படுவது யார்?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறான சம்பவங்கள் சுட்டிக்காட்டும் அளவு இடம்பெறவில்லை என்பது அனைவராலும் இன்றுவரை ஒத்துக்கொள்ளக் கூடிய உண்மையே.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் சில மாறுதல்கள் இடம்பெற்றிருந்தாலும் இவ்வாறான சமூக சீர்கேடுகள் ஏற்படவில்லை. இது இப்போதைய அரசியல் தலைவர்களுக்கும் நன்றாக தெரியும்.

தமிழர்கள் யுத்த காலப்பகுதியில் கூட அச்சம் இன்றி வாழ்ந்தார்கள். ஆனால் இப்போது கொலை, கொள்ளை, வாள் வெட்டு என்று தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது.

இதே போன்று விடுதலைப்புலிகள் இருக்கும் காலத்தில் நாம் சந்தோசமாகவே இருந்தோம். விடுதலைப்புலிகளின் தலைவர் இருக்கும் போது யாழில் சமூக சீர்கேடுகள் குறைவாகவே இருந்தன என்பது இப்போதும் வடக்கு மக்களின் தெரிவிக்கும் கருத்துகள்.

அதனால் இதனை தடுக்க மீண்டும் விடுதலைப்புலிகளின் தலைவர் தான் வருவாரோ..? என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

கொடூரமான சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்லுகின்றது. வித்தியா கொலையில் ஆரம்பித்து தற்போது ஹம்சிகாவின் படுகொலை வரை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஹம்சிகா படுகொலை செய்யப்பட்ட போது ஏழு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கர்பிணிப் பெண் என்று கூட பார்க்காமல் மிருகத்தனமாக கொலை செய்துள்ளனர்.

இப்படியே தொடருமாக இருந்தால் பெண்களின் நிலை என்னவாகும்…? அந்த சோகம் மறைவதற்குள் நேற்று இளைஞர்கள் இருவரை வாள்களால் சரமாரியாக மர்ம கும்மல் தாக்கியுள்ளது.

நிற்க.., கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் போன்றவற்றிற்கு பெயர் போன யாழ் இன்று கொலை, கொள்ளை, வாள் வெட்டுக்கும் எடுத்து காட்டாக உள்ள கொலைகளமாக மாறி வருவது கவலைக்குறிய விடயமாகும்.

வாள் வெட்டு திடீர் என தோற்றம் பெற வில்லை. இதன் பிண்ணனியில் யார் செயற்படுகின்றார்கள் என்பதை கண்டுபிடித்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது மக்களின் முக்கிய வேண்டுக்கோள்.

யாழ் மக்களை அச்சுருத்தும் பயங்கரவாதியாக சட்டவிரோத போதைப்பொருள் பாவனை காணப்படுகின்றது. இன்றைய பாரியசவால்களில் ஒன்றாக புகைத்தல், போதைப் பொருட்பாவனை காணப்படுகின்றது.

சிறியவர், பெரியவர், படித்தவர், பாமரர் என்ற பாகுபாடுகளின்றி வயது வித்தியாசமின்றி எல்லோரும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டு சீரழிவதனை பல்வேறு சம்பவங்கள் எமக்கு சான்று பகர்கின்றன.

“இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்” என்பர் ஆனால் இன்று இவ்வாறான வாசகங்கள் எல்லாம் செல்லாக் காசுகளைப் போல் பெறுமதி அற்றவைகளாக ஆகிவிடுமோ என அஞ்சுமளவு எமது மாணவ சமூகத்தின் நிலையைப் பற்றியும் இத்தருனத்தில் குறிப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயமாக ஆகியுள்ளது.

காரணம் மாணவர்களுக்கு மத்தியிலும் இளைஞர்களுக்கு மத்தியிலும் போதைப்பொருள் பாவனை ஊடுருவியுள்ளது என்றால் யாரும் மறுப்பதுக்கில்லை.

நாளைய தலைமுறை எதனை அடுத்த தலைமுறையினருக்கு கற்று கொடுக்க போகின்றது, மிச்சம் வைக்கப் போகின்றது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இதை தடுக்க வில்லை என்றால் நிச்சயம் கொலை, கொள்ளை, வாள் வெட்டில் யாழ்ப்பாணம் முதலிடம் பெறும். இது வரை பெற்றுக் கொண்ட பெருமை எல்லாவற்றையும் புதைத்துக் கொண்டு அழிந்து போகும் என்பது உண்மையே….!

-http://www.tamilwin.com

TAGS: