அமெரிக்காவில் உள்ளவர்களை கொண்டே அந்நாட்டை தகர்த்து காட்டுவோம் என ஐ.எஸ் தீவிரவாதிகள் டொனால்டு டிரம்புக்கு சவால் விட்டுள்ளனர்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுபேற்ற டொனால்டு டிரம்ப் ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
அவருக்கு பதிலடி தரும் விதத்தில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் டெலிகிராம் சமூகவலைதளம் மூலம் ஒரு செய்தியை தெரிவித்துள்ளது.
டிரம்பின் உத்தரவுகள் பலன் ஏதும் தரப்போவத்தில்லை. அமெரிக்காவில் இஸ்லாமியர்கள் வரக்கூடாது என கூறி டிரம்ப் எங்களுக்கு நல்லது தான் செய்கிறார்.
அமெரிக்கா மீது வெளியாட்கள் தாக்குதல் நடத்த போவத்திலை, அமெரிக்க குடிமக்களை வைத்தே நாங்கள் அமெரிக்காவை தகர்த்து காட்டுவோம் என அதில் கூறப்பட்டுள்ளது.
-http://news.lankasri.com