தாயகம் திரும்பிய முன்னாள் போராளி ஒருவர் அதிரடியாக கைது..!

arrest-091வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய முன்னாள் போராளி ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரான இவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2013ஆம் ஆண்டு தொழில் நிமிர்த்தம் மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றிருந்த குறித்த நபர் தாயகம் திரும்பிய நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது.

-http://www.tamilwin.com

TAGS: