10,000 அகதிகளுக்கு வேலை கொடுக்கும் நிறுவனம்: சதித் திட்டம் தீட்டும் டிரம்ப் ஆதரவாளர்கள்

starbacksஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் 10,000 அகதிகளை புதிதாக வேலைக்கு அமர்த்த முடிவு செய்தது.

இந்நிலையில் இந்நிறுவனத்திற்கு எதிராக சதித்திட்டம் தீட்டி வருகின்றனர் டிரம்பின் ஆதரவாளர்கள்.

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் அகதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்த நடவடிக்கையை கூகுள், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற பல நிறுவனங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸும் தனது எதிர்ப்பை தெரிவித்தது.

டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 75 நாடுகளில் செயல்படும் தனது நிறுவனத்தில் 10,000 அகதிகளுக்கு வேலை வழங்க உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் ஸ்டார்பக்ஸை புறக்கணிக்க வேண்டும் என பிரசாரம் செய்து வருகின்றனர்.

அதேசமயம் ஸ்டார்பக்ஸின் நடவடிக்கையை வரவேற்றுள்ள பொதுமக்கள் பலர் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

-http://news.lankasri.com