இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் எங்கே? கதறியழும் தாய்மார்கள்

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட 6 மாத குழந்தைகள் உட்பட சிறுபிள்ளைகள் எங்கே என கேட்டு கதறியழுத தாயார் மயக்கமடைந்து விழுந்த சம்பவத்தினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் அசாதாரண சூழ்நிலை நிலை ஏற்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை, நில ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்.மாவட்டத்தில் கறுப்புப்பட்டி போராட்டம் நடைபெற்றது.

யாழ்.பழைய பூங்காவின் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது, இறுதி யுத்தத்தின் பின்னர், பொது மன்னிப்பு அடிப்படையில் இராணுவத்தினரிடம் 6 மாதக் கைக்குழந்தைகள் உட்பட சிறுபிள்ளைகள் உறவினர்களினால் ஒப்படைக்கப்பட்டனர்.

ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே?, ஜெனிவாவே ஏன் சிங்களவர்களுக்காக ஒத்துப் போகின்றாய். எங்களுக்கு நீதி தரமாட்டாயா என கேட்டு இராணுவத்தில் சரணடைந்தவர்களின் உறவுகள் இதன்போது கதறி அழுதனர்.

இரகசியமான முறையில் பஸ் நிலையத்தில் சரணடைந்த குடும்பம் ஒன்றினை கொண்டு வந்து விட்டுச் சென்றது போன்று எமது உறவுகளையும் கொண்டு வந்து தாருங்கள்.எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை அரசாங்கமே எமக்கு நீதி சொல்லு, எமது பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள் என உறவுகள் கதறியழுதமையும் குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: