இலங்கையின் இராணுவ மையங்களை அமைப்பதற்கு சீனாவுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று இலங்கை அறிவித்துள்ளது.
சீனாவில் இன்று இடம்பெற்ற இலங்கையின் சுதந்திரதின நிகழ்வின்போது இலங்கையின் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு முதலீடு செய்ய வரும் சீனர்களிடம் சீன இராணுவத்துக்கு வசதிகள் செய்துக்கொடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திரப்பகுதி சர்வதேச வர்த்தகத்துக்கு முக்கியமான பகுதி என்பதால், அங்கு தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஹம்பாந்தோட்டை துறைமுகப்பகுதியில் சீனா, பாகிஸ்தான், இந்தியா, போன்ற நாடுகளுடன் நட்பு ரீதியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
-http://www.tamilwin.com