கட்டுப்படுத்தப்பட்ட ஆவா குழு : வடக்கில் அதிரடி படையினர்

vaalvedduஆவா குழுவினை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் அதிரடி படையினர் வடக்கில் தற்போதும் சுற்றிவளைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அவா குழு உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்து, வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தியதாக ஒரு வருடங்களுக்கு முன்னர் யாழ் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் கடந்த காலங்களில் வாள்வெட்டுக்கள் மற்றும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்பட்டவர்களை கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டது என கூறியிருந்தனர்.

ஆனால் மீண்டும் இந்த வருடம் வாள்வெட்டுக்கள், மற்றும் வணிக நிறுவனங்கள் மீதான தாக்குதல் போன்ற பல்வேறு அசம்பாவித செயற்பாடுகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளது. அத்துடன் தற்போது 5 இளைஞர்கள் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வகையில் நேற்றைய தினம் யாழ் குடாநாட்டில் வாள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டுள்ள 17 குழுக்கள் இயங்கி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்கள் தென் இந்தியாவில் வருகின்ற திரைப் படங்களை பார்த்து விட்டு இவ்வாறு அசம்பாவித செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு முன்னர் அவா குழு என்ற அமைப்பே பல்வேறு அசம்பாவித செயற்பாட்டில் ஈடுபடுவதாக கூறி, பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் மாணவர்களை கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது குடா நாட்டில் 17 குழுக்கள் இயங்கி வருகின்றது என்று தெரிவிக்கப்படுவதாவது, மீண்டும் வடக்கில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாணவர்களை கைது செய்வதற்கா ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் இவ்வாறான செயற்பாடுகளை பொலிஸார் விடுத்து, உண்மையில் இதன் பின்னணியில் இருப்பவர்களை கைது செய்து ஒரு சிறந்த தீர்வினை வழங்க வேண்டும். என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: