புலிகள் மீளுருவாக்கம் என்ற நாடகத்தை அரங்கேற்ற காரணம் என்ன..? பாராளுமன்றில் கூட்டமைப்பு கேள்வி

ltte_flagAஇலங்கை அரசுக்கு ஜெனிவாவில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களை சமாளிக்கும் நோக்கிலேயே புலிகள் மீளுவாக்கம் என்ற நாடகத்தை அரங்கேற்றியிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இதனை தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் வாக்குறுதிகள் வழங்கி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அந்த வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.

இதன் காரணமாக ஏற்படகூடிய அழுத்தங்களை குறைத்துக்கொள்ளும் வகையிலேயே புலிகள் மீளுருவாக்கம் என்ற நாடகம் அரங்கேற்றப்படுகின்றதா..? எனவும் அவர் இதன் போது கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், தமிழ் மக்களை திறந்தவெளி சிறைச்சாலையில் தொடர்ந்தும் வைத்திருக்கவே இந்த அரசாங்கம் விரும்புகின்றதா..? எனவும் அவர் இதன் போது கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் செல்லும் போது அவர்களுக்கு பாதுகாப்பாக பொலிஸாரும், இராணுவப் புலனாய்வாளர்களும் செல்கின்றனர்.

இவ்வாறான நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு முன்னாள் போராளிகள் திட்டமிட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் எத்தனை முன்னாள் போராளிகள் கைது செய்யப்படவுள்ளனர். இவ்வாறு போலியான நடகங்களை அரங்கேற்றி பயங்கரவாத தடுப்பு சட்டத்தை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா..? என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: