தமிழர்கள் உலகை ஆண்டு வந்தார்கள் என்பது அனைவருக்கும் நன்றாக தெரிந்த விடயம். ஆனாலும் தமிழர்கள் உலகில் கால் பதித்தது? தமிழ் மொழி தோன்றிய காலம்? அவர்களின் ஓங்கிய கை அடங்கியது எவ்வாறு?
போன்ற அனைத்தையும் தொகுத்து நோக்கும் போது, தமிழனின், வீரம், தொன்மை, சிறப்பு, அழிப்பு, சேர்வு, பிரிவு, நலிவு உட்பட அனைத்து விடயங்களும் தெளிவுபடுத்தப்படும்.
காலம் ஓர் சக்கரம் என்பதை தமிழ் மொழியையும் தமிழர்களையும் கொண்டு பார்க்கலாம். 14 பில்லியன் வருடங்களுக்கு முன் இருந்து இன்றைய உலக சுற்றுகை வரை.
கி.மு 14 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் அண்ட பெருவெடிப்பின் மூலம், பிரபஞ்சம் தோன்றி புவி உருவானது. கி.மு 6 தொடக்கம் 4 பில்லியன் வரை பூமி தோன்றி வளரத் தொடங்கியதாக கணிப்பு.
தென் குமரியின் தெற்கே லொமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது. கி.மு. 2.5 பில்லியன்களில். ( உலகின் மூத்த குடி தமிழர்களே, குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மக்கள் தமிழர்கள் என்பது இன்றும் ஆய்வாளர்கள் ஒத்துக் கொண்டது.)
பல பகுதிகளுக்கு மனித இனம் சுற்றத் தொங்கியது கி.மு. 470000. அதன் பின்னர் வளர்ச்சியடைந்த மனித இனம் கி.மு. 360000 களில் நெருப்பை கட்டுப்படுத்தினர்.
யோமோ மனிதர்கள் அல்லது நியான்டர்ஸ் இனத்தவர்கள் ஆசியா, ஆப்பிரிக்காவில் பரவிச் சென்றனர். கி.மு. 300000 களில் தொடர்ந்து கி.மு. 75000 களில் உலகின் கடைசி பனிக்காலம்.
இந்த காலப்பகுதிகளில் உலக சனத் தொகை 1.7 மில்லியன்களாக இருந்தது என்பது ஆள்வாளர்களின் கூற்று.
சிறப்பான காலம் இது அதுவே கி.மு. 50000களில் தமிழ்மொழி தோற்றம் பெற்று விட்டது. 25000 வருடங்களுக்கு முன்னர் அல்ல, அதனை விட பழைமை வாய்ந்தது எம் தமிழ்.
கி.மு. 35000 தொடக்கம் 10000 வரை தமிழ் மொழியில் இருந்து பல்வேறு மொழிகள் தோற்றம் பெற்றன.
கிமு. 1052 முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை போன்ற பல்வேறு நூல்கள் படைக்கப்பட்டன. 4449 தமிழ்ப் புலவர்கள் ஒன்றானர். இவர்கள் இணைக்கப்பட்டது தமிழ் முதற்சங்கத்திற்காக.
கிமு. 10000 கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கண்டத்தில் மட்டும் 100000 தமிழர்களுக்கு அதிகமாக வாழ்ந்து வந்தனர்.
இன்று தமிழர் தொண்மையைக் காட்டும் குமரிக்கண்டம் கி.மு. 6087 கடற்கோளால் மூழ்கிப்போனது. கிமு 6000 தொடக்கம் 3000 வரை கபாட புறம் வெண்தேர் செழியன் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தை 3700 புலவர்களோடு நிறுவினான்.
முதற் சங்கத்தினை விடவும் இந்த சங்கத்தில் புலவர் எண்ணிக்கை குறைந்து போனவு வேதனையான விடயமே. ஆனால் புலமைக்கும் தமிழர் பெருமைக்கும் மட்டும் பஞ்சம் இல்லை.
கிமு. 5000களில் 5 மில்லியன்களாக சனத்தொகை அதிகரிக்க மொஹஞ்சதாரா, ஹரப்பா என சிந்து வெளி நாகரீகம் தோன்றியது.
அதற்கு அடுத்து கிறிஸ்தவ உலக நாட்குறிப்பு தோன்றியது கி.மு 4000களில். கி.மு 3200களில் சிந்து வெளித் தமிழர் சூரிய சந்திர நிலைப்பாட்டை கண்டு பிடித்தனர். அதன் சுற்றுகையையும் விண்மீன்களின் படைப்பையும் கூறினர் தமிழர்.
அமெரிக்காவின் தமிழ் இனத்தவர்கள் என ஆய்வாளர்கள் கூறும் மாயன் மக்கள் கிமு 3113 நாட்காட்டி படைத்தனராம். இந்த மக்கள் இன்று வரை மர்ம இனமே அதன் படி பார்த்தால் தமிழனும் இன்று வரை மர்மமானவனே.
அதற்கு அடுத்து கலியுகம் ஆரம்பமாகியது கிமு 3102 களில். கலியுத்தின் போக்கு அடுத்த பகுதியாக தொடரும்… எதிர்ப்பார்த்திருங்கள். தமிழர்களுக்கு திடீர் திருப்பு முனைகள் ஏற்படுத்தப்பட்டது கலியுகத்திலேயே.
-http://www.tamilwin.com
எனக்கு ஒரு உண்மை தெறிய வேண்டும்– நான் படித்தவரையில் நாம் யாவரும் ஆப்பிரிக்காவிலிருந்து உலகம் முழுவதும் பரவியர்கள் ஆனால் குமாரி கண்டத்திலிருந்து மற்ற இடங்களுக்கு பரவியவர்கள் என்று கூறுவது எவ்வளவு தூரம் உண்மை?
தற் பெருமை பேசி ஒரு புண்ணியமும் ஆவது கிடையாது. நமக்கு ஆதாரங்கள் தேவை. நாம் அப்படிப்பட்ட மூத்த குடிமக்கள் ஆனால் நமக்கு பெருமையே– இருந்தாலும் இப்போது என்ன நடக்கிறது? தமிழ் நாட்டில் நடப்பது கேவலம். பேசுவதற்க்கே கூசுகிறது– தமிழ் நாட்டில் நடப்பது கேவலத்திலும் கேடு கெட்ட கேவலம் — இவ்வளவு மூத்த குடிமக்கள் ஏன் ஜாதி பித்து பிடித்து வறட்டு கௌரவத்தினால் மற்ற தமிழர்களை /தமிழர்களை சம இனமாக ஏற்றுக்கொள்ள முடிய வில்லை? அத்துடன் இங்குள்ள தில்லு முள்ளு திருட்டு த்தனம் -அங்கு நடப்பது எல்லாமே சந்தேகத்திற்கு இடம் அளிப்பதாகவே உள்ளது. நாடு முன்னேற வேண்டும் மற்றவர்கள் தஹ்மிழரை மதிக்க வேண்டும் என்ற எண்ணமே அங்குள்ளவர்களுக்கு கிடையாது.மற்ற இந்தியர்கள் தமிழர்களுக்கு என்ன மரியாதை கொடுக்கின்றனர்? தமிழர்களை இந்தியர்களாகவே எண்ணுவதில்லை. மத்தியில் தமிழர்களுக்கு என்ன மரியாதை? எவ்வளவு பேர் மத்தியில் வேலை செய்கின்றனர்? சிறிய மாநிலமாகிய கேரளாவை சார்ந்தவர்கள் அங்கு கொடி கட்டி பறக்கின்றனர். இது க்ரிஷனமேனோன் காலத்தில் இருந்து நடக்கிறது– இந்தியா சீனாவிடம் அடி வாங்கியதே கிருஷ்ணமேனனின் கையால் ஆகாதனத்தினால் கேன்சரால் மலையாளிகள் தான் தற்காப்பு அமைச்சகத்தில் கொடி கட்டி பறக்கின்றனர்– இதெல்லாம் கண்ணுக்கு த்தெரியாத தமிழர்களுக்கு எப்படி மூத்த குடி என்ற தகுதி ? இன்னும் எவ்வளவோ கூறமுடியும்–
தமிழ் சார்! இந்தி தெரிந்தால் தான் மத்தியங்களில் வேலை செய்ய முடியும். தமிழ் நாட்டில் தான் இந்தி இல்லையே! தனிப்பட்ட முறையில் இந்தி படித்துவிட்டு பிராமணன் அனைத்திலும் ஆதிக்கம் செய்கிறான். அத்தோடு மற்ற மாநிலத்தவரும்!
abraham terah அவர்களே– இந்தியாவில் கல்விக்கொள்கை சிங்கையில் இருக்கும் கல்விக்கொள்கை போல் இருக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் ஆங்கிலமும்,தன தாய் மொழியையும் மற்ற ஒரு இந்திய மொழியையும் கற்க வேண்டும். இந்தி பேசும் மக்கள் மற்ற ஒரு இந்திய மொழியில் தேர்வு அடைந்திருக்க வேண்டும் என்று கொண்டு வந்தால் அது பாராபட்சம் இல்லாத ஒரு கல்வி கொள்கை அத்துடன் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். மலேசியாவில் ஆங்கிலம் தூக்கி எறியப்பட்டதன் விளைவை தான் நாம் பார்க்கிறோமே?
நண்பரே! இந்தி, இந்தியாவின் ஆட்சி மொழி. அவ்வளவு தான். அது அவர்கள் வகுத்த கொள்கை. நம்மால் தலையைச் சொரியத் தான் முடியும்! வேறு ஒன்றும் செய்ய முடியாது!