தமிழ் மக்களின் அபிலாசைகள், புரிந்துணர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக ஒரு தீர்வுத் திட்ட அரசியல் என்பது தற்போது கணிசமான அளவு நிறைபெறும் நிலையில் இருக்கின்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி. கோ.அழகரட்ணம் தலைமையில் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாறிவரும் சமகாலத்தில் புதிய அரசியல் ரீதியான மாற்றத்திற்கு எதிர்காலத்தின் வகிபாகம் என்னும் கருப்பொருளில் சட்டத்தரணிகள், மற்றும் விரிவுரையாளர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றுள்ளது.
குறித்த செயரலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடியவகையில் அரசியல் தீர்வு அமையும் என்பது அனைவரினதும் நோக்கமாகும்.
கடந்த 60 வருடங்களாக எமது அரிசியல் ரீதியான மாற்றத்தில் அரசியல் சாசனம் என்பது புதிதான ஒன்றையும் ஏற்படத்த வில்லை.
அத்துடன், அந்தந்த ஆண்டுகளில் உள்ள அரசியல் தலைமைத்துவ சாசனத்தில் உள்ளவாறு எமது மக்களின் அபிலாசைகள் மற்றும் புரிந்துணர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக ஒரு தீர்வுத் திட்ட அரசியல் தற்போது கணிசமான அளவு நிலையில் இருக்கின்றது.
பலரலும் எற்றுக்கொள்ள கூடிய ஒரு அரசியல் தீர்வாக அமையும் என்பது எல்லோரினது ஒருநோக்கமாக இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புதிய அரசியல் ரீதியான மாற்றங்களின் எதிர்ப்பு, நிரந்தர தீர்வு, புரிந்துணர்வு, அபிலாசைகள் கடந்த ஆண்டுகளில் மக்களின் கருத்து கணிப்புக்களின் மதிப்பீடுகளும் அதன் உண்மை தன்மைகள் மற்றும் அரசாங்கத்தின் புதிய அரசியல் மாற்றத்திற்காக முகம் கொடுக்கும் சவால்கள் மற்றும் எதிர்கால நிலைப்பாட்டைக்கொண்டு கருத்துக்கள் கூறப்பட்டன.
-http://www.tamilwin.com