சிலாங்கூர் மாநில அரசில் பாஸின் நிலை குறித்து அதன் பொதுப் பேரவை முடிவு செய்யும் என அதன் தகவல் பிரிவுத் தலைவர் நஸ்ருடின் ஹசான் கூறினார்.
பொதுப் பேரவைக் கூட்டம் அடுத்த ஆண்டு ஏபரலில் நடக்கிறது. அதில் பிகேஆருடன் ஒத்துழைப்பது குறித்து விவாதிப்பதுடன் மாநில அரசில் தொடர்ந்து இருப்பதா வேண்டாமா என்பதும் முடிவு செய்யப்படும்.
“எங்களுக்கு நன்மை தரும் என்றால் தொடர்ந்து இருப்போம். அதைப் பற்றி விவாதிக்க பொதுப் பேரவைதான் சிறந்த இடம்”, என்றாரவர்.
மண்குதிரையை நம்பி கடலில் இறங்கியதன் விளைவு..விதி சதிகார கூட்டத்துக்கு சாதகமாக இருக்குமென்றால் அதை யாரால் தடுக்க இயலும்,..
வேண்டாம் தேர்தல் முன்னுக்கே விலகி விடுங்கள். உங்களின் பலன் அப்போது தெரிந்து விடும் அல்லவா.
தலைவர் நிக் அஸீஸ் இருக்கும்வரை எந்த பிரச்னையும் இல்லை ! இப்போது நீங்கள் பக்கத்தான் விட்டது போவதே நல்லது !