இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை அதிகரிக்க தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பும், ஐரோப்பிய ஒன்றியமும் வாக்குறுதியளித்துள்ளன.
வடக்கிற்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணைப்பாளர் ஹூனா மெக்கோலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டுலாய் மார்க் ஆகியோர் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை சந்தித்து இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளனர்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது அதிகமாக பேசப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகாரத்தை பரவலாக்க வேண்டிய தேவை மற்றும் வடக்கு மாகாண சபைக்கு கிடைத்த அதிகாரங்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இது குறித்து வடக்கு மாகாண முதலமைச்சர் முன்வைத்த யோசனைகள் மற்றும் கருத்துக்கள் அனுகூலமான மட்டத்தில் இருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com