இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்காக சர்வதேச நீதிபதிகள் மற்றும் வழக்கும் தொடரப்பட வேண்டியது அவசியம் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் அவுஸ்திரேலியாவுக்கான பணிப்பாளர் எலாய்ன் பிரியர்சன் இதனை தெரிவித்துள்ளார்.
போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதாக இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திடம் உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை அது உரிய முறையில் நடைபெறவில்லை என அவர் கூறியுள்ளார்.
-http://www.tamilwin.com