சட்டம் 355 பேரணியின் ஏற்பாட்டாளர்கள் மறுத்திருந்தும் பெர்சத்துவின் தலைவர் மகாதிர் நேற்று நடைபெற்ற சட்டம் 355 பேரணியை அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறினார்.
நேற்றைய பேரணியில் பங்கேற்றவர்கள் ஷரியா நீதிமன்றங்கள் சட்டம் 355க்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்த போதிலும், அப்பேரணி ஏற்பாட்டாளர்களின் நோக்கங்கள் இன்னும் கேள்விக்குரியதே என்று மகாதிர் கூறினார்.
“இஸ்லாத்தில் உனது நோக்கம் மிக முக்கியமானது. (பேரணியின்) நோக்கம் 14 ஆவது தேர்தலில் வெற்றி பெறுவது என்றால், அது தவறானது.
“இஸ்லாத்தை நிலைநிறுத்துதல் என்றால், அது சரியானது.
“ஆனால், அது அரசியல் நோக்கமுடையதாகத் தெரிகிறது. அப்படி என்றால் அது தவறானதாகி விடுகிறது”, என்று மகாதிர் கோலாலம்பூர் செராஸில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சட்டம் 355 க்கு திருத்தங்கள் செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதற்கு ஆதரவு திரட்டுவதற்காக பாஸ் தலைமையிலான ஒரு பேரணி நேற்று பாடாங் மெர்போக்கில் நடைபெற்றது.
அந்த மசோதா மீதான விவாதம் மார்ச் மாதத்தில் தொடங்கும் நாடாளுமன்ற தொடர் கூட்டத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவின் தேசிய மதம் இஸ்லாம் , இது எல்லோருக்கும் தெரியும் .ஆனால் இந்த நாடு ஒரு இஸ்லாமிய நாடு அல்ல ! அப்படியிருக்க , இந்த காக்கா மகாதீர் ஆட்சி காலத்தில் இந்த நாடு ஒரு இஸ்லாமிய நாடு என்பதுபோல் தோற்றத்தை உருவாக்கி மலாய் சமூகத்தின் ஆதரவை
பெற்றான் ! எல்லா நாத்த வேலைகளுக்கும் இவனே காரணகர்த்தா , இன்று ஆடு நனைகிறதே என்று இந்த கேடுகெட்ட ஓநாய் அழுகிறது !!!!!
தேசிய மதம் என்று நாமா சொல்லுகிறோம்? அவர்களே சொல்லிக் கொள்ளுகிறார்கள்! அவ்வளவு தா!
குவால லம்பூரில் இருக்கும் தேசிய மசூதிக்கு நன்கொடை அளித்தவர்கள் யார்? இப்போது அந்த மதத்தில் இல்லாதவர்கள் உள்ளே போக முடியாது. 1972 ல் நான் அங்கு போயிருந்த பொது யாரும் உள்ளே போக முடியும். எந்த தடையும் கிடையாது. 60 லில் இந்த மசூதிக்காக இந்தியர்களும் சீனர்களும் எவ்வளவு நன்கொடை அளித்தார்கள் என்று வெளிப்படையாக சொல்லவேண்டும். அப்போது எல்லாம் இவ்வளவு நாதாரித்தனம் கிடையாது.
பல்லின மக்கள் போராட்டத்தில் பிறந்தது நாட்டின் சுதந்திரம். இனவாதத்தின் அரசியல் நுழைத்து பிரிவினை உருவாக்கிய நீங்கள் உத்தமர் போல் நடிப்பது அனைவரும் அறிவர்.
அதற்க்கு துணை போனது யார்? அந்த நாதாரிகளுக்கு வாக்கு போட்டது யார்?