இலங்கை இராணுவம் தொடர்பில் தற்போது இருவேறு விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் இலங்கை இராணுவம் தொடர்பிலான செய்திகளும் இறுதி யுத்த கால காணொளிகளும் அதிக அளவில் வெளிப்படுத்தப்படுகின்றன.
தென்னிலங்கை தரப்பு ஒரு சில ஊடகங்கள் யுத்த கால கட்டத்தில் இராணுவம் முகம் கொடுத்த இக்கட்டான சூழ்நிலைகளை தற்போது காணொளிகளாக வெளியிட்டு வருகின்றது.
அந்த வகையில் நேற்று வன்னி ஊடாக இலங்கை இராணுவம் ஊடருத்துச் சென்ற விதமும், இராணுவத்திற்கு எவ்விதம் ஆயுதம், உணவு கொண்டு செல்லப்பட்டது, அவர்கள் போர் செய்த முறை போன்ற விபரங்கள் மீண்டும் காணொளியாக வெளிடப்பட்டுள்ளது.
இதேவேளை 57 ஆவது படைப்பிரிவு ஆரம்பமாக்கப்பட்டு 11 மாதக்காலப்பகுதியில் 2000 ஆயிரத்திற்கும் அதிகமான விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும்.,
அதில் 1000 இற்கும் அதிகமானவர்களின் பெயர்கள் விடுதலைப்புலிகளின் தரப்பினாலேயே வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஊடுருவல் யுத்தத்தில் இராணுவத்தரப்பிற்கு குறைந்த அளவு இழப்பே ஏற்பட்டுள்ளது. என 57 ஆவது படைப்பிரிவின் தளபதி தெரிவித்துள்ளார்.
மேலும் இப்படியே தொடர்ந்து சென்று ஊடுவிச் செல்ல எமக்கு போதுமான உதவிகள் வந்து சேருகின்றன. அதனால் குறைந்த காலத்திற்குள் வெற்றியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் இராணுவம் அடைந்த துயரினை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காகவே இந்த வகையில் யுத்த காணொளிகள் வெளியிடப்பட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக யுத்தத்தில் மரணித்தவர்கள் தொடர்பில் இராணுவம் ஒரு எண்ணிக்கையையும், விடுதலைப்புலிகள் ஒரு எண்ணிக்கையையும் கூறிவந்ததுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.
இங்கு விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாகி வருகின்றார்கள் என ஒரு தரப்பு கூறிக் கொண்டு வரும் நிலையில், இராணுவத்தினருக்கு தீவிர பயிற்சிகளும் தற்போது கொடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் இராணுவத்தினர் போர்க்குற்றம் புரியவில்லை, அவர்கள் தமது உயிர்த்தியாகம் பெற்று நாட்டிக்கு வெற்றி ஈட்டித்தந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறாயினும் யுத்த களத்தை மீண்டும் கண் முன் காட்டும் செயற்பாடுகள் ஊடாக பெற்றுக் கொள்ளக் கூடிய பதில் அரசியல் இலாபங்களா? என்பது இப்போதைக்கு வெளிப்படையில்லை.
-http://www.tamilwin.com