வடக்கின் தலை நகரமாக மாங்குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் ஒன்றை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக, மேல் மாகாண சபை அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நகர திட்டமிடல் மாத்திரம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படுகிறது. எனினும் அரச நிறுவனம் மற்றும் அனைத்து நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு நகரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் வடக்கு மாகாண சபையின் அரசியல் அதிகார சபை மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நகர அபிவிருத்தி, நீர் நிறைந்த பிரதேசம், சுற்றாடல் வளம் கொண்ட பிரதேசங்கள் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய அபிவிருத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அதற்கமைய இந்த பிரதேசத்தில் கிட்டத்தட்ட 36 ஏக்கர் அளவு அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com

























