போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா பேரவையில் முறைப்பாடு செய்யுமாறு விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

WarCrime1போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் முறைப்பாடு செய்யுமாறு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் முன்நிறுத்த வேண்டுமென ஈழப் புலம்பெயர் அமைப்புக்கள் ஐந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கோரிக்கை விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் உள்ளடங்குகின்றார்.

பிரிட்டன் தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ இராச்சியம், பிரான்ஸ் தமிழர் பேரவை, தமிழர் காங்கிரஸ் மற்றும் ஐரோப்பிய தமிழர் பேரவை உள்ளிட்ட ஐந்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், 11 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் பிரதான இரண்டு அங்கத்துவ நாடுகளான ரஸ்யாவும், சீனாவும் இந்த யோசனைக்கு ஒரு போதும் ஆதரவளிக்காது என ஜெனீவா தகவல்கள் தெரிவிப்பதாக குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: