மியான்மரில் நூற்றுகணக்கான ரொஹிங்கியா இஸ்லாமியர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும், கொலை செய்யப்படுவதுமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
மியன்மாரில் சுமார் பத்துலட்சம் ரொஹிங்கியா இஸ்லாமியர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு அங்கே குடியுரிமை இல்லை.
அந்நாட்டின் ராணுவத்தினர் அவர்களை கொடூரமாக கையாள்கின்றனர். இது சம்மந்தமாக பல வீடியோக்கள் வெளியாகி வருகிறது.
கொடூரமான கொலைகள், மோசமான பாலியல் பலாத்காரம் காரணமாக கடந்த ஆறு மாதத்தில் இங்கிருந்து எழுபதாயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.
இது குறித்து மியான்மர் தலைவி ஆங்க்சான் சூசி பதிலளிக்க மறுத்து விட்டார்.
அவருக்கு நெருக்கமான தலைவர்கள் கூறுகையில், இது மனித குலத்துக்கு எதிரான குற்றங்களென்று தாங்கள் நம்பவில்லை என்றும் இது உள்நாட்டு விவகாரமேயன்றி வெளிநாட்டு பிரச்சனையல்ல என கூறியுள்ளனர்.
-http://news.lankasri.com


























இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்தது அப்ப உலகம் தூக்கம் கொண்டிருந்தது
ரொஹிங்கியா இனத்தை மியான்மாரியர்கள் வெறுக்கிறார்கள் என்பது தான் உண்மை. ஏதோ அகதிகளை போல் வாழும் அவர்கள் சுத்தம், சுகாதாரம் என்பதெல்லாம் அவர்களுக்கே மறந்து போய்விட்டது. அதனால் அவர்களை பார்த்தாலே முகத்தைச் சுளிக்கும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கைத்தரம் இருக்கிறது. வங்காளதேசிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மலேசியா ஏன் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது? கொடுக்க மாட்டார்கள்! அவர்களைக் குப்பைத் தொட்டியாகப் பார்க்கிறார்கள். அவ்வளவு தான்!