ஐக்கிய நாடுகள் சபையின் 34 ஆவது கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையில் பல்வேறு சட்டச்சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் சட்டத்தரணி சுகாஷ் லங்காசிறிக்கு கருத்து தெரிவிக்கையில்,
தற்போது இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதா அல்லது இல்லையா என்பதே அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தினை பயன்படுத்தி இலங்கையால் ஒன்றுமே செய்ய முடியாத நிலையே காணப்பட்டது.
இந்த நிலையில் மறுபடியும் கால அவகாசம் வழங்கப்படுவதென்பது இலங்கை தப்பிப்பதற்கான வழியினை ஏற்படுத்திக் கொடுக்கும் சந்தர்ப்பமாகவே அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-http://www.tamilwin.com