காணி விடுவிப்பை வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கேப்பாபுலவு மக்கள் ஈடுபட்டுள்ள நிலையில், அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின் பிராதான நுழைவாயில் முன்பாக இன்று இரண்டாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் கோரிக்கைகளை அரசாங்கம் கவனத்தில் எடுத்தபாடில்லை. இதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் இன்று இராணுவ முகாம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது பெண் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தையடுத்து கோபமுற்ற நபர் ஒருவர், இராணுவ தலைமையகம் முன்பாக உள்ள ஆழம் கூடிய நீர்த்தாங்கி ஒன்றி குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்கொலைக்கு முயற்சி செய்த நபரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-http://www.tamilwin.com